இந்தியாவில் கொரோன தொற்றால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு இரயில் மூலம் பத்திரமாக சொந்த ஊர் அனுப்பப்படனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு மூலம் புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது. இதன் விளைவாக பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த 1200 தொழிலாளர்கள் இன்று அதிகாலை இவர்களுக்கான சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சிறப்பு ரயிலை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் அருண் உள்ளிட்டோர் கொடியசைத்து அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதற்கு முன்னதாக காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 355 பேர் இன்று சிறப்பு ரயில் மூலம் காரைக்காலிலிருந்து உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது காரைக்காலில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த ரயில் இரவு 12 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்தது. அவர்களுடன் புதுச்சேரியில் காத்திருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் சேர்த்து 1200 பேர் பீகார், உத்திர பிரதேசம் சென்றனர்.
இதே போல் அடுத்ததாக அசாம், காஷ்மீர் மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் என புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதேபோல அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசிய, சவூதி அரேபியா உள்ளிட்ட வெளி நாட்டில் உள்ள தொழிலாளர்களை விரைவில் இங்கே அழைத்து வர உள்ளனர் என்றும் புதுவை மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…