புதுச்சேரியில் மதுக்கடைக்குள் புகுந்து மது வகைகளை கடித்து குதறிய எலிகள்… புலம்பும் புதுவை அதிகாரிகள்…

Published by
Kaliraj

கொரோனா ஊரடங்கால் புதுச்சேரியில் சீல் வைக்கப்படிருந்த மதுபான கடைக்குள் எலிகள் புகுந்து, அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகளை கடித்து குதறி கிழித்து மதுவை ருசிபார்த்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 450 க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இந்தியா முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த  50 நாட்களுக்கு மேலாக மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறு பூட்டப்பட்ட கடைகளில் இருந்து மதுபானங்கள் எடுக்கப்பட்டு, திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்ததையடுத்து, புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அறிவுறுத்தலின்பேரில், மாநில கலால்துறையினர் அனைத்து மதுபான கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

Bihar excise inspector, who arrested JD(U) leader with 168 liquor ...

இதில் பல்வேறு கடைகளில் திருட்டு சம்பவம் அரங்கேரியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 8 அரசு அதிகாரிகள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.  இந்நிலையில் மறைமலையடிகள் சாலையில் உள்ள மதுபானக்கடை ஒன்றிற்கு சென்ற கலால் துறையினர், அங்குள்ள இருப்பு குறித்து கணக்கெடுப்பு செய்துகொண்டிருந்தபோது மதுக்கடையில் இருந்து பயங்கரமான  துர்நாற்றம் வீசியது. இதையடுத்து கடை முழுவதும் சோதனை செய்த அவர்கள்  அங்கு அதிகளவில் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்டு கிடந்தும்,அங்கிருந்த ஒயின் பாக்கெட்டுகள் கிழிந்து கிடந்தன.

எனவே  அதிகாரிகள் மதுபானக் கடைக்கு பின்புறம் சென்று பார்த்தபோது, எலிகள் கூட்டம் கூட்டமாக ஒயின் பாக்கெட்டை கிழித்து குடித்துகொண்டிருந்தன. இதனால் அங்கு மதுபானங்களின் இருப்பு குறித்து கணக்கெடுக்க முடியாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். எனவே இப்படி சேதப்படுத்திய எலிகள் மீது எவ்வாறு வழக்குப்பதிவு செய்வது என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

2 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

2 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

3 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

4 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

4 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

5 hours ago