பொதுமக்களுக்கு காய்கறிகள் இலவசம்.! அசத்தும் புதுக்கோட்டை இயற்கை விவசாயி.!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்து கடைகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) போன்றவை வழக்கம் போல இயங்கும் எனவும், காய்கறி கடை, மளிகை கடை, பெட்ரோல் பங்குகள் ஆகியவை குறிப்பிட்ட நேர கட்டுப்பாட்டின் படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி மூர்த்தி என்பவர் பொதுமக்களுக்கு உணவளிக்க விரும்பியுள்ளார். அதற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவே, தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மேலும், தான் காசு கொடுத்து வாங்கிய காய்கறிகள் என சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான 1000 கிலோ காய்கறிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வீடு வீடாக சென்று வழங்கி வருகிறார்.