கண்டிப்பாக புதுச்சேரியில் புதிய கல்விகொள்கை அமல்படுத்தப்படும்.! ஆளுநர் தமிழிசை உறுதி.!
புதிய கல்வி கொள்கை பற்றி சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். அது தவறு. விரைவில் புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்காலில் கூறியுள்ளார்.
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, காரைக்காலில், இந்திய விண்வெளி அறிவியல் மையமான இஸ்ரோ சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.
அந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, ‘ புதுசேரியில் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் பின்பற்றப்படும் கல்வி கொள்கை பின்பற்ற படுகிறது. இதனையெல்லாம் ஒன்றிணைத்து தான் புதிய கல்விக்கொள்கை உள்ளது.
அதனை கண்டிப்பாக புதுச்சேரியில் அமல்படுத்துவோம். புதிய கல்வி கொள்கையால் வட இந்தியர்களின் ஆதிக்கம் இருக்கும் என கூறுகிறார்கள் . அது தவறான கருத்து. தமிழகத்தில் சுமார் 1400 பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடத்தப்படுகிறது. அங்கு வட இந்தியர்களின் ஆதிக்கம் இருக்கிறதா.? என கேள்வி எழுப்பினர்.
மேலும், சிலர் ஏழை மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துவிட கூடாது என புதிய கல்விக்கொள்கை பற்றி தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். இந்தியை திணிப்பதாகவும், குலக்கல்வியை புதிய கல்வி கொள்கை ஆதரிப்பதாகவும் சிலர் தவறான கருத்துக்களை கூறுகின்றனர். அவர்கள் எல்லாம் புதிய கல்வி கொள்கையினை முழுதாக படிக்க வேண்டும். அனைத்தையும் அரசியலாக்க வேண்டாம். எனவும் அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை பேசினார்.