பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது எஸ்மா சட்டம் பாயும்.! ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை.!
புதுசேரி முழுவதும் மின்தடை ஏற்படுத்தியது தவறு. அதனை செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். அத்தியாவசிய தேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் தேவைப்பட்டால் எஸ்மா சட்டம் பாயும். – புதுசேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.
புதுசேரியில் மின்சாரத்துறையை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் நிருபர்களிடம் பேசுகையில், ‘மின் ஊழியர்கள் செய்வது சரியில்லை. மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
அண்மையில் புதுசேரி முழுவது ஏற்படுத்தப்பட்ட செயற்கை மின்தடையால், மருத்துவமனையில் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கபடுவர். கோரிக்கை எதுவாக இருந்தாலும் போராட்டம் அதற்கு தீர்வல்ல. இது போன்ற இடையூறு செய்யும் வேலைகளில் ஈடுபடுவோர் நிச்சயம் தண்டிக்கப்படுவர். அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டால் எஸ்மா சட்டம் பாயும். ‘ என புதுசேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் பேட்டியளித்துள்ளார்.