ஊரடங்கு காரணமாக ஓவர் டைம் வேலை பார்த்தால் சம்பளம் இரண்டு மடங்கு.! புதுசேரி முதல்வர் அதிரடி.!

வேலை நேரத்தை அதிகப்படுத்தினால் ஊழியருக்கு சம்பளம் இரட்டிப்பாக கொடுக்கும் நிலை வரும். – புதுசேரி முதல்வர் நாராயண சாமி கருத்து.
கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறை நிறுவனங்கள் கடந்த மார்ச் 24முதல் மூடப்பட்டிருந்தது. கடந்த மே 4முதல் அறிவிக்கப்பட்ட 3ஆம் கட்ட ஊரடங்கில் தான் தொழில்துறை நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட வேலையாட்களை கொண்டு வேலை செய்ய தளர்வு அளிக்கப்பட்டது.
இதனால், சில தொழில்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசிடம், ஒரு கோரிக்கை வைத்தது. அதாவது, ஊரடங்கு காரணமாக உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அடுத்த 3 மாதங்களுக்கு ஊழியர்களை கூடுதலாக அதாவது 8 மணி நேரத்திற்கு பதிலாக, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க கோரிக்கை முன்வைக்கப்பது.
இந்த கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த புதுசேரி முதல்வர் நாராயண சாமி, ‘ வேலை நேரத்தை அதிகப்படுத்தினால், சம்பளம் இரட்டிப்பாக ஊழியருக்கு கொடுக்கும் நிலை வரும். ‘ என கூறியுள்ளார். அதாவது, ‘ தொழிலாளர் சட்டப்பிரிவு 59-இன் படி, 8 மணி நேரத்திற்கு கூடுதலாக வேலை பார்க்கும் ஊழியருக்கு குறிப்பிட்ட விதிகளின் படி சம்பளம் இரட்டிப்பாக கொடுக்க வேண்டும்.’ என அவர் குறிப்பிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025