மின் ஊழியர்களின் 6 நாள் போராட்டம்.! முதல்வருடன் பேச்சுவார்த்தை.! புதிய உடன்பாடு.! விவரம் இதோ…
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உடன் மின்துறை ஊழியர்கள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உறுதியளித்த பின்னர், இந்த பேச்சுவார்த்தையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி மின்சாரத்துறையானது, தனியாரிடம் ஒப்படைக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 28ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று வரை நீடித்தது.
கடந்த ஞாயிற்று கிழமை புதுசேரி காவல்துறையினர் , துணை ராணுவபடையின் உதவியுடன் சேர்ந்து, சுமார் 250 போராட்டக்காரர்களை நள்ளிரவில் கைது செய்து காலையில் விடுவித்தனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து மீண்டும் போராட்டம் அதிகரித்தது.
இந்நிலையில், நேற்று புதுசேரி அரசவை கூட்டம் நடைபெற்று இருந்த நிலையில், அந்த அமைச்சரவை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு, போராட்டத்தில் ஈடுப்பட்ட முக்கிய மின்சாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். உடன் மின்சாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களும் இருந்தார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஊழியர்களின் கோரிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் பேச்சுவார்த்தைக்கு பின்பு தொடர்ந்த அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றபட்டு, அந்த கோரிக்கைகள் மத்திய அரசுக்கு எடுத்துரைக்கப்டும் எனவும்,
பின்பு மத்திய அரசு தனியார் மயமாக்கல் திட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர முடியும் என்று கூறுகிறார்களோ அதனை அப்படியே மின்சாரத்துறை ஊழியர்களிடம் கூறிவிடுகிறோம் என புதுசேரி முதல்வர் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.