கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால் மக்கள் ஒத்துழைத்து அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வீட்டில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுசேரியில் வரும் 30ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற உள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இந்த பட்ஜெட் கூட்டத்தை விரைந்து குறைவான நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துதான் இந்த பட்ஜெட் கூட்டம் நடைபெற உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…