பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடு… மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

CMStalin TN

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை அண்ணா நூலகத்தில் வெளியிட்டிருந்தார்.

பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தேர்வு முடிவை எதிர்நோக்கி காத்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும்  அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டரில், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், இம்முறை தேர்ச்சி பெறாதவர்களுக்கு வெற்றிக்கு இன்னும் ஒருபடிதான், விரைவில் நீங்கள் வெற்றி பெற வாழ்துகிறேன். உங்களின் உயர்கல்விக்கு, நமது அரசு நான் முதல்வன் திட்டம்’ உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளது. நம்பிக்கையுடன் முன்னேறிச்செல்லுங்கள், இந்த உலகை வெல்ல… என பதிவிட்டுள்ளார்.</p

>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்