பொதுத்தேர்வு நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்.!

Default Image

மக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துவுள்ளார்.

சென்னை மாதவரம் மண்டலத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் ஒத்துழைத்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .

ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இருக்கும் என உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் முக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வரவேண்டும். சட்டத்தை வைத்து மிரட்ட முடியாது. தும்மல், இருமல், காய்ச்சல், ஆகியவை கொரோனாவின் அறிகுறிகள். களத்தில் 11,000 அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஊரடங்கை மீறியதாக வாகன பறிமுதல், அபராதம் என கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை வேண்டும். நம்மால் மற்றவர்களும் பாதிக்க கூடாது என்ற எண்ணமும் வேண்டும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நிர்பந்தத்தால் ரத்து செய்யவில்லை என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்