ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் என தகவல்.
தமிழக முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால், நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து, இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர். இதில் புதுச்சேரியில் மட்டும், 16 ஆயிரத்து 802 மாணவ – மாணவியர் பங்கேற்க உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக மாநிலம் முழுதும், 3,936 தேர்வு மையங்களும், தனி தேர்வர்களுக்கு 147 மையங்கள் மற்றும் சிறை கைதிகளுக்கு 9 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 17,194 மாணவர்களில் 847 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் கூறப்படுகிறது. தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் ஆன நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று, திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 16,294 மாணவ மாணவிகளில் 738 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தகவல் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…