பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு -அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக, வகுப்பு எடுப்பதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட்-12 முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை, செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும், அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 14ம் தேதி தொடங்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.