இளநிலை வேளாண் பட்ட படிப்புக்கான தரவரிசை வெளியீடு.!

Default Image

தமிழகத்தில் இளநிலை வேளாண் பட்ட படிப்புக்கான தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர் பிரவீன்குமார் முதலிடம் பிடித்துள்ளார். பெரம்பலூரை சேர்ந்த கிரிவாசன் எனும் மாணவன் இரண்டாவது இடத்தையும், ராசிபுரத்தை சேர்ந்த மாணவி புஷ்கலா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர் என பல்கலைக்கழக துணை வேந்தர் எம் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நிலையில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தரவரிசை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மாணவர்கள் முதலிடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தற்போது ஆன்லைன் மூலமாகவும் மாணவர்கள் தரவரிசை பட்டியலை பார்த்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்