பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் வைத்திருக்க தடை.!
11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம்.
தமிழ்நாட்டில் 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது அரசு தேர்வுகள் இயக்ககம். இதில், 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுந்தும் மாணவர்கள் தேர்வு அறையில் செல்போன் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியரும் தேர்வறையில் செல்போன் வைத்திருக்க அனுமதி இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மீறி மாணவர்கள், ஆசிரியர்கள் தகவல் தொடர்பு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் செல்போன் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பு ஏற்காது என பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 முதல் ஏப்ரல் 4-ஆம் த்தி வரை பொதுத்தேர்வு நாடைபெற உள்ளது. இதுபோன்று, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.