மருத்துவமனைகளில் 24/7 பாதுகாப்பு… வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை.

TN Govt Hospital Kalaignar

சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவர்களுக்கு முழு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தும், கைதிக்குத்து சம்பவத்தை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை. பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு  மருத்துவர்கள், ஊழியர்களை தாக்குவோருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கத்தக்க குற்றமாகும்.

இதனை மக்கள் பார்வையில் படும்படி வைக்க கூறியுள்ளார். மேலும் மருத்துவமனை வளாகங்களில் சரியான வெளிச்சம் இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து சுகாதார வசதிகளிலும் பாதுகாப்புப் பணியாளர்களின் வருகை பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை மூலம் கண்காணிக்கப்படும் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படும்.

மருத்துவமனைகளில் 24/7 ஆட்கள் கொண்ட பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்தல், அருகிலுள்ள காவல் நிலையத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துதல், போலீஸ் ரோந்து, CCTV செயல்பாடு, காவல் உதவி செயலி பயன்பாட்டை உறுதி செய்யவும் ஆணையிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்