வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) சென்னையை புரட்டி போட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை விட மிக்ஜாம் புயல் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சென்னை புறநகர் மட்டுமல்லாது சென்னை மத்திய முக்கிய பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது.
மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய அரசு சார்பிலும், பல்வேறு தன்னார்வலர்களும், அரசியல் அமைப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர். தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை விட்டு விலகிய காரணத்தால் மழையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
மிக்ஜாம் புயல் – 25 விரைவு ரயில்கள், புறநகர் ரயில் நாளை (04.12.2023) ரத்து..!
கனமழை பாதிப்பு காரணமாக நேற்று போல இன்றும் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னை மெட்ரோ மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விமான சேவை இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அருகம்பாக்கம் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் சென்னை பிரதான பேருந்து நிலையமான கோயம்பேட்டிற்கும், வடபழனிக்கும் இடையே கூட போக்குவரத்தை செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. சென்னை மத்திய பகுதியை விட புறநகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழக தேர்வுகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி பகுதியில் முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்த உதவி எண் 1913 என்ற எண் வேலை செய்யாத காரணத்தால் 044-2519207, 044-2519208, 044-2519209 ஆகிய எண்ணிற்கு அழைக்கவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…