2022-ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு..! எத்தனை நாட்கள் தெரியுமா…?

Default Image

2022ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது உண்டு. அந்த வகையில் வருகிற 2022-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2022ஆம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • ஆங்கிலப் புத்தாண்டு – 01-01-2022 – சனிக்கிழமை
  • பொங்கல் – 14-01-2022- வெள்ளிக்கிழமை
  • திருவள்ளுவர் தினம் – 15 -01-2022- சனிக்கிழமை
  • உழவர் திருநாள் – 16-01-2022- ஞாயிற்றுக்கிழமை
  • தைப்பூசம் – 18-01-2022- செவ்வாய்க்கிழமை
  • குடியரசு தினம் – 26-01-2022- புதன்கிழமை
  • வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்) – 01-04-2022- வெள்ளிக்கிழமை
  • தெலுங்கு வருடப் பிறப்பு – 02-04-2022- சனிக்கிழமை
  • தமிழ் புத்தாண்டு / மகாவீரர் ஜெயந்தி / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் – 14-04-2022- வியாழக்கிழமை
  • புனித வெள்ளி – 15-04-2022- வெள்ளிக்கிழமை
  • மே தினம் – 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை
  • ரம்ஜான் – 03-05-2022- செவ்வாய்க்கிழமை
  • பக்ரீத் – 10-07-2022- ஞாயிற்றுக்கிழமை
  • மொகரம் – 09-08-2022- செவ்வாய்க்கிழமை
  • சுதந்திர தினம் – 15-08-2022- திங்கட்கிழமை
  • கிருஷ்ண ஜெயந்தி – 19-08-2022- வெள்ளிக்கிழமை
  • விநாயகர் சதுர்த்தி – 31-08-2022- புதன்கிழமை
  • காந்தி ஜெயந்தி – 02-10-2022- ஞாயிற்றுக்கிழமை
  • ஆயுத பூஜை – 04-10-2022- செவ்வாய்க்கிழமை
  • விஜயதசமி – 05-10-2022- புதன்கிழமை
  • மிலாதுன் நபி – 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை
  • தீபாவளி – 24-10-2022 திங்கட்கிழமை
  • கிறிஸ்துமஸ் – 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை

மேலும் இந்த அறிவிப்பானது, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்