மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களும் நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும், என்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்- ஆளுநர் அறிவுறுத்தல்
பொதுவிடுமுறை அழைக்கப்பட்டாலும், குடிநீர், பால், மருத்துவ சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவை துறைகள் நாளை வழக்கம்போல் இயங்கும். சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு தேடி சென்று மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், புயல் கரையை கடந்த பின் மழையின் அளவு படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…