நிவர் புயல் எதிரொலி ! 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று முன்தினம் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது.நேற்று காலை புயலாக வலுவடைந்தது.இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் பேருந்து சேவை ,ரயில்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை என தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.இந்நிலையில் சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.