2024-ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை அறிவிப்பு..!

Tngovt

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசு பொது விடுமுறை தினத்தை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டும் இன்னும் ஒன்றரை மாதத்தில் நிறைவடையவுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024-ஆம் ஆண்டில் 24 நாட்களை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் மட்டும் 6 அரசு விடுமுறைகள் வருகின்றன.  திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொங்கல் விடுமுறை வருவதால், அதன் முந்தைய நாட்களான சனி, ஞாயிறுடன் சேர்த்து 5 நாட்கள் நீண்ட விடுமுறை விடப்படவுள்ளது.

சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுகிறது – வானதி சீனிவாசன்

பிப்ரவரி மாதத்தில் எந்த பொது விடுமுறையும் கிடையாது. மார்ச் மாதத்தில் ஒரு நாளும்,  ஏப்ரல் மாதத்தில் 5 நாட்களும்,  மே மாதத்தில் ஒரு நாளும், ஜூன் மாதத்தில் ஒரு நாளும், ஜூலை மாதத்தில் ஒரு நாளும், ஆகஸ்ட் மாதத்தில் 2 நாட்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல செப்டம்பர் மாதத்தில் 2 நாட்களும், அக்டொபர் மாதத்தில் 3 நாட்களும், டிசம்பர் மாதத்தில் ஒருநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளி, அக்.31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்