ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு என்பது ஆபத்தானது – இந்திய கம்யூனிஸ்ட்

Published by
பாலா கலியமூர்த்தி

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. புதிய கல்வி கொள்கையின் (NEP) அடிப்படையில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கிறது மத்திய அரசின் கல்வி அமைச்சகம். இரண்டு முறை நடத்தப்படும் பொதுத்தேர்வில் இதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகள் படிக்க வேண்டும் என்றும் அதில் ஒன்று இந்தி மொழியாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு என்பது ஆபத்தானது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே நீட் தேர்வு காரணமாக ஆயிரக்கணக்கில் பயிற்சி மையங்கள் உருவாகி பணம் பறிக்கும் கும்பல் வளர்ந்து வருகிறது.

அடித்தட்டு மக்களின் குழந்தைகள், தேர்வு முறையால் அச்சப்பட்டு பதற்றமடைந்த தற்கொலை செய்கின்றனர். பள்ளி கல்வியில் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு என்ற மத்திய அரசின் அறிவிப்பு கல்வி  தாக்குதலாகும். இந்தியை எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அகங்காரத்துடன் பேச்சுக்கு செயல் வடிவம் தரும் முயற்சி இது. அரசின் வஞ்சக திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

16 minutes ago

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

46 minutes ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

1 hour ago

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

10 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

11 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

13 hours ago