பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மற்றும் தேர்வு முடிவுகள் தேதி குளறுபடியால்ஆசிரியர்கள் குழப்பம் .
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் 10 வகுப்பு மற்றும் +2 மாணவர்கள் கடைசி தேர்வில் பலர் கலந்து கொள்ளவில்லை. அதுபோல் +1 மாணவர்களுக்கான கடைசி தேர்வு மட்டும் நடைபெறவில்லை. இதனால், அந்த தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான தேதியை நேற்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
அதன்படி +2-ம் வகுப்புக்கு ஜூன் 4-ம் தேதியும், +1-ம் வகுப்புக்கு ஜூன் 2-ம் தேதியும், அதுபோல் 10-ம் வகுப்புக்கு ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிக்கான அறிவிப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் 28-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை +2 விடைத்தாள் திருத்தும் பணியும், ஜூன் 11 முதல் 23-ம் தேதி வரை + 1 வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.
இதுபோல், 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 16-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற வேண்டும். ஆனால், தவறாக ஜூலை 23-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் பணி ஜூன் 24 முதல் ஜூலை 7-ம் தேதிக்கு பதிலாக ஜூலை 24-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்கா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு போராக இருந்து வருகிறது. இதன் காரணமாக…
சென்னை : இன்று சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் ரோஹித் சர்மா…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல்…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…
சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…