பொதுமக்கள் கவனத்திற்கு..! இன்றே கடைசி நாள்…!
மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி,நவ. 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.
இதற்காக 2,811 மின் பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று முன்தினம் மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எனவே, மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்றே இணைத்துக்கொள்ளுங்கள். இன்றுடன் அவகாசம் நிறைவடையும் நிலையில், மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.