அரசியல்

பொதுமக்கள் கவனத்திற்கு..! நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது…!

Published by
லீனா

சென்னையில் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. 

நேற்று தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளி விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தக்காளி விலை உயர்வு என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் தான்  தெரிவித்திருந்தார்.

மேலும், சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்தார். சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும். முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். அதன்படி, வடசென்னையில் 32 ரேஷன் கடைகளில், மத்திய சென்னையில் 25, தென் சென்னையில் 25 என மொத்தம் 82 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது.

நியாய விலை கடைகளில் தக்காளி பெற எந்த கட்டுப்பாடும் கிடையாது. குடும்ப அட்டையை காண்பிக்க தேவையில்லை. மக்கள் அருகில் உள்ள தக்காளி விற்கப்படும் எந்த ரேஷன் கிடைக்கும் சென்று பணம் கொடுத்து தக்காளி வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

16 minutes ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

34 minutes ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

1 hour ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

1 hour ago

திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…

1 hour ago

HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?

HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…

2 hours ago