வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் வரும் 28ஆம் தேதி வரை தடை.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலின் தன்மை, அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று (6-8-2021) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப் பரவல், ஊரடங்குக் கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-8-2021 அன்று காலை 6.00 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்றுப் பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், நடைமுறையில் கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று உள்ள பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது.
இக்கட்டுப்பாடுகளுடன், 23-8-2021 காலை 6 மணி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…