யூ-டியூப்பர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூ-டியூபர் மதன் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். பின்னர், இந்த வீடியோக்களானது வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்மூலம் மதன் பிரபலமானார். இதனையடுத்து, யூ-டியூபர் மதன் ஆன்லைன் கேம் விளையாட்டின்போது பெண்களை ஆபாசமாகப் பேசியதாகவும் அவர் நடத்தி வரும் டாக்சிக் மதன் 18+ எனும் யூ-டியூப் சேனலில் பெண்களை ஆபாசமாக பேசி 100 -க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெண்களிடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியாக தவறாக பேசியதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, யூ-டியூபர் மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பிரவீன் என்பவரால் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக மதனை சைபர் கிரைம் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் உத்தரவு பிறப்பித்தனர்.
ஆனால் யூ-டியூபர் மதன் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிக்க மொபைல் ஐபி (IP) முகவரி மூலமாக கண்டுபிக்க போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதற்கிடையில், யூ டியூபர் பப்ஜி மதன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர் பெண்களை ஆபாசமாகத் திட்டுதல், தடைச் செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், யூ-டியூப்பர் மதனின் மனைவி, தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்த மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை நடத்தினர். மதன் எங்கிருக்கிறார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…