மதனின் ஜாமீன் மனுவை நீதிபதி செல்வகுமார் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
யூடியூப்பில் ஆபாசப் பேச்சுகள் பேசியதாக பப்ஜி மதன் மீது பல புகார்கள் வந்தன. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பப்ஜி மதனை தேடி வந்த நிலையில், தலைமறைவான மதன் கடந்த ஜூலை 18-ஆம் தேதி தருமபுரியில் வைத்து போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், ஜாமீன் கோரி மதன் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் தம்மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை, பெண்களுக்கு எதிராக கொடுமைகள் ஏதும் செய்யவில்லை, காவல்துறை ஏற்கனவே என்னை காவலில் எடுத்து விசாரித்துள்ளதால் ஜாமீன் தேவை என நீதிமன்றத்தில் பப்ஜி மதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வரும் இன்று சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க நீதிபதி செல்வகுமார் உத்தரவு பிறப்பித்தார். இந்த மனு இன்று நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கினால் விசாரணை சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மதனின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மதனின் 2 யூ-டியூப் சேனல்களை கவனித்து வந்ததாக அவரது மனைவி கிருத்திகாவை கடந்த ஜூலை 16-ந் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கிருத்திக்காவை கைது சிறையில் அடைத்த போது அவரது 8 மாத குழந்தையும் சிறையில் இருந்தது. பின்னர், குழந்தையுடன் சிறையில் உள்ள கிருத்திகாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…