பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் – திருமாவளவன்

Default Image

நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில் இது மாணவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் என்று திருமாவளவன்  கூறியுள்ளார். 

தமிழகத்தில் முதல் முறையாக நடப்பு கல்வியாண்டு முதல் 5-ஆம் மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.இதன்படி இந்த ஆண்டு இந்த பொதுத் தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பொதுத்தேர்வு நடத்துவது மோசமான அரசு பயங்கரவாத நடவடிக்கை.இதனை அரசு கைவிட வேண்டும்.பள்ளி குழந்தைகள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல் ஆகும்.இதனை எந்த வகையிலும் ஞாயப்படுத்த முடியாது.எனவே 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை ,தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்