தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரண நிதி வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published by
Venu

விவசாயிகளின் மனதில் சூழ்ந்திருக்கும் சினத்திலிருந்து சிறிதளவேனும் தப்பிக்க வேண்டுமானால், உடனே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி என அறிவித்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 5-ஆம் தேதி மத்திய குழு சென்னை வந்தடைந்தது.சென்னை,கடலூர்,வேலூர் ,புதுச்சேரி  உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்தனர்.

 நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.புயலால் சேதமடைந்த வீடுகள், சாலைகள், பாலங்கள், மின்கம்பங்களை  உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நவம்பர் இறுதி வாரத்தில் “நிவர்” புயல் மற்றும் கனமழையால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி – காவிரி டெல்டா விவசாயிகளின் வேளாண் பயிர்கள் கணக்கிட முடியாத அளவிற்கு சேதப்பட்டுள்ளன. மாநில பேரிடர் நிதியிலிருந்து 74 கோடி ரூபாயை விடுவித்து உத்தரவிட்ட அ.தி.மு.க. அரசு, அதை யாருக்குக் கொடுத்தது? என்ன செலவு செய்தது? என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.

கடுமையான இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கும் எந்த நிவாரண நிதியுதவியும் கிடைக்கவில்லை.இடைக்கால நிவாரணமாக நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்குக என்று கோரிக்கை விட்டும், முதலமைச்சர் ஏனோ “வராத திட்டங்களுக்கு” அடிக்கல் நாட்டு விழாக்களிலும், அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி அரசியல் ரீதியாக விளம்பரப்படுத்திக் கொள்வதிலும் மட்டுமே கவனமாகவும் கருத்தாகவும் இருந்து வருகிறாரே தவிர – இடைக்கால நிவாரண உதவியை வழங்கிட முன்வரவில்லை.எனவே, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளின் மனதில் சூழ்ந்திருக்கும் சினத்திலிருந்து சிறிதளவேனும் தப்பிக்க வேண்டுமானால், உடனே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி என அறிவித்திட வேண்டும்! செய்வாரா திரு. பழனிசாமி அல்லது எப்போதும் போல, பொய்களைச் சொல்லியே இனியும் பொழுது போக்குவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Published by
Venu

Recent Posts

‘ஒரு அற்புதமான மனிதர்..’ பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

‘ஒரு அற்புதமான மனிதர்..’ பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…

4 minutes ago

மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி… பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.!

 டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

44 minutes ago

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…

1 hour ago

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

2 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

2 hours ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

2 hours ago