அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போதிய வசதியை செய்துகொடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 

கொரோனா ஊரடங்கு காரணமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெளி மாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனவா என்பதை அறிந்து கொள்ள இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தையும், தமிழக தலைமைச் செயலாளரையும் எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகள் குறித்து, மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, மருத்துவ போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்