இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமையடைகிறேன் – விஸ்வநாதன் ஆனந்த்

Default Image

சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாதது என விஸ்வநாதன் ஆனந்த் பேச்சு. 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்டு செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றினார். அப்போது இந்தியன் மற்றும் சென்னையை சேர்ந்தவன் என்ற  பெருமையுடன் இங்கு நிற்கிறேன். நேப்பியர் பாலம் முதல் பால்பாக்கெட் வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த போட்டிக்கான பணியாற்றிய தன்னார்வலர்கள், சிரித்த முகத்துடன் தங்களது வேலையை செய்தனர்.

செஸ் விளையாடத் தொடங்கும் போது நான் ஒரு நாள் சாம்பியன் ஆவேன் என நினைத்து விளையாடினேன். சென்னையும் செஸ் விளையாட்டும் பிரிக்க முடியாதது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்