பாரத் பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்த போராட்டத்திற்கு தடை..!

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் 53.29 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துஉள்ள நிலையில் மத்திய அரசின் முடிவை கண்டித்து வருகின்ற 28, 29-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
தொழிற்சங்கங்களின் போராட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்நிறுவனத்தின் தென் மண்டல பொது மேலாளர் ஷெனாய் கூறுகையில் , போராட்டத்தில் ஈடுபடுவதற்கு 6 வாரத்திற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என தொழில் தகராறு சட்ட விதி உள்ளது.
இந்நிலையில் அந்த விதியை பின்பற்றாத இந்த போராட்டம் சட்டவிரோதமானது என கூறினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பாரத் பெட்ரோலியம் தொழிற்சங்கங்கள் அறிவித்த போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025