போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது!
ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்துக்கு கழக தொழிலாளர்கள் பணிமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடைபெறுவதால், போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சத்தியமங்கலத்தில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட பெற்ற நலத்துறை சங்கத்தினர் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Bus Strike : பண்டிகைக்கால ஸ்ட்ரைக் முறையற்றது.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
இதுபோன்று புதுக்கோட்டையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டு வந்த தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம், செய்யாறு உள்ளிட்ட இடங்களில் ஓடும் பேருந்து முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், காரைக்குடியில் பேருந்தை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் பேரணியாக வந்த மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் பேருந்தை மறித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரில் தேர்தல் வாக்குறுதிகளுக்கு கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.