திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த தவெக தொண்டகள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Tvk executives arrested

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக அறிவித்த வீட்டுமனை பட்டாவை உடனடியாக வழங்க வேண்டும் என கடந்த 5ம் தேதி தவெக சாா்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

ஆனால், தவெக சாா்பில் அளிக்கப்பட்ட மனுவை கண்டித்து திமுகவினர் தகராறு செய்துள்ளனர். அதாவது, ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்ததும், திமுகவினரை செர்ந்த சிலர் தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்கள் உட்பட நான்கு பேரும் காயமடைந்தனர்.

பின்னர், தகவலறிந்து வந்த கீழையூர் போலீசார் காயமடைந்த நால்வரையும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அறிந்த நாகை மாவட்ட தவெக செயலாளர் மா.சுகுமாரன் தலைமையில், கட்சியினர் கீழையூர் ஸ்டேஷனில் குவிந்தனர். அப்பொழுது, ஏற்கெனவே இலவச பட்டா வழங்காதது குறித்து புகாா் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்பொது, புகார் அளிக்க வந்தவர்களை தாக்கிய திமுகவினர் மீது உரிய நடவடிக்கை இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தவெகவினா் தெரிவித்தனா். அதன்படி, இன்று நாகையில் இலவச வீடு மனை பட்டா விடு பட்டு போன நபர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள் மீது, தாக்குதல் நடத்திய திமுக பொறுப்பாளர் ரவிச்சந்திரனை கைது செய்யக்கோரி மேலப்பிடாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சில மணி நேர்த்தில் பெண்களை தாக்கிய திமுக ஒன்றிய செயலாளரை‌ கைது செய் வலியுறுத்தியும், தமிழக பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போராட்டம் செய்த நாகை மாவட்ட தவெக மாவட்டச் செயலாளர் சுகுமார் மற்றும் தவெக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இப்பொது, கைது செய்யப்பட்ட தவெக தொண்டகள் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்