ஐஐடி மாணவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு நடத்திய போராட்டத்தில் காங்கிரஸ் பட்டியல் அணி தலைவர் உள்பட 120 பேர் மீது வழக்குப்பதிவு.
காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு:
சென்னை ஐஐடியில் தொடரும் தற்கொலைகளுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஐடி மாணவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு காங்கிரஸ் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய காங்கிரஸ் பட்டியல் அணி ரஞ்சன்குமார் உள்பட 120 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐஐடிக்களில் மாணவர்கள் தற்கொலை:
மும்பை, சென்னை ஐஐடிக்களில் மாணவர்கள் தற்கொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு இந்திய மாணவர்கள் சங்கம் கண்டங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஐஐடிக்களில் தொடரும் தற்கொலைகளை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்:
சென்னை ஐஐடி வளாகத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிப்பதையோ, மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையோ நிறுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தூண்டிவிடும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தீப்பந்தம் கொளுத்தி போராட்டம்:
மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2021 வரை நாடாளுமன்ற அறிக்கையின்படி 122 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 72 மாணவர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்தார். இந்த சமயத்தில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தீப்பந்தம் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின், ரஞ்சன்குமார் உள்பட 120 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…