சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை வீட்டிற்குள் அடங்கி கிடைக்கும் நிலையில், மக்களை காக்கும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் மக்களுக்காக வெளியே வந்து உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவம் பார்த்து மக்களுக்காக உயிரை தியாகம் செய்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட இன்று பலரும் எதிர்ப்பிலும், தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சென்னை கீழ்பாக்கத்தில், மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, மறியல் செய்த 90 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், வேலங்காடு மயானத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை தாக்கிய 21 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…