முதியவர்களை பட்டாம்பூச்சி போல பாதுகாக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்
முதியவர்களை பட்டாம்பூச்சி போல பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேகொண்டு வருகிறது. இருப்பினும், கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், இதுகுறித்து ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், ‘கொரோனாவை தடுக்க ஓராண்டுக்கு மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். அது தான் நிரந்தரமான தீர்வு என்றும், தென்மாவட்டங்களில் தேவைக்கேற்ப கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சுனாமி, வெள்ளம், கனமழையை போல கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் மாஸ்க், கை கழுவுவது, என்றும், முதியவர்கள் பட்டாம்பூச்சி போல பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.