பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் கைதாகி இத்தனை ஆண்டுகளாகியும் விடுவிக்கப்படாதது, அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், மமக்கள் பலருக்கும் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. மேலும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
ஆனால் தற்பொழுது வரை அவர்கள் 7 போரையும் விடுதலை செய்யவில்லை. பேரறிவாளன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 30 நாட்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி வரை பேரறிவாளனின் பரோலை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அவரை விடுதலை செய்யக்கோரி பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனால் ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார், மேதகு ஆளுநர் அவர்களே, உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பே பேரறிவாளன் விடுதலைக்கு ஒப்புதல் வழங்கி, ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…