திருட்டில் செழிப்போ செழிப்பு ! அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி – கமல்ஹாசன் ட்வீட்
லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 75 நாட்களாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில், ரூ.6.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 14 -ஆம் தேதி வரை மேற்கொண்ட சோதனையில் 33 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என்று தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி.
— Kamal Haasan (@ikamalhaasan) December 17, 2020