திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்த வழக்கில் ,அவரது வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றார்.கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதற்கு பின் இந்த வழக்கை நிராகரிக்கோரி திமுகவின் கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.மேலும் சந்தானகுமார் மனுவை ஏற்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.இதனால் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது , கனிமொழி வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.மேலும் எதிர் மனுதாரர்கள் 4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…