கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு ! உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

Default Image

திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்த வழக்கில் ,அவரது வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.   

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றார்.கனிமொழி வெற்றிக்கு எதிராக சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதற்கு பின் இந்த வழக்கை நிராகரிக்கோரி திமுகவின் கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் நடைபெற்ற விசாரணையில் கனிமொழி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.மேலும் சந்தானகுமார் மனுவை ஏற்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.இதனால் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது , கனிமொழி வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.மேலும்  எதிர் மனுதாரர்கள்  4 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்