யாராலும் திருட முடியாத சொத்து உங்கள் கல்வி – முதலமைச்சர்
மாணவ, மாணவிகள் கற்கும் கல்விதான் திருட முடியாத சொத்து என முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை.
சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் “நம் பள்ளி நம் பெருமை” திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் முதல்வர் தொடக்கி வைத்தார். இதன்பின் பேசிய முதல்வர், 37,557 அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான முயற்சியாக புதிய மேலாண்மை குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.
மாணவ, மாணவிகள் கற்கும் கல்விதான் திருட முடியாத சொத்து. திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம் பள்ளிப்பருவம். பெற்றோர்கள் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. பள்ளி கல்விக்கு தமிழக அரசு மிக மிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளியின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து மேலாண்மை குழு செயல்பட வேண்டும் என்று மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க மேலாண்மை குழுக்கள் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.