சொத்து வரி, குடிநீர் கட்டணத்திற்கு 3 மாத கால அவகாசம்.! அரசாணை வெளியீடு.!

சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் இயங்கவில்லை. இதனால், பொதுமக்கள் பலரும் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மக்களின் நிலை அறிந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது சொத்துவரி, குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்தவித அபராத தொகையும் வசூலிக்கப்படாது. இதற்கான அரசாணையை நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.