சொத்து பிரச்சனை : வெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற கொடூர கொலையாளிகள்!
வெட்டிய தலையை கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற கொடூர கொலையாளி.
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை புதுவயல் தெருவை சேர்ந்தவர் யூசப் ரகுமான். இவர் புதுவையில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டணத்தில் வசிக்கும் இவரது அண்ணன் சகுபர் க்கும் இடையே இரண்டு கோடி மதிப்பிலான இடம் தொடர்பாக சொத்துப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 8 மணி அளவில் கடைக்கு சென்ற சகுபர் அலி மகன்கள் நியாஸ் மற்றும் ரகுமான், யூசப்பை அரிவாளால் தாங்கியுள்ளனர். தன்னை தொடர்ந்து, யூசப் தான் வைத்திருந்த அரிவாளை வைத்து எதிர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஆனால் அவரை மடக்கிப் பிடித்த நியாஸ் மற்றும் ரகுமான் அவரது தலையை துண்டித்து உள்ளன. இதனால் யூசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, சாக்கோட்டை காவல் நிலையம் சென்ற கொலையாளிகள் வெட்டிய தலையுடன் தவறை ஒப்புக்கொண்டு சரணடைந்தனர்.
இருவரையும் கைது செய்த சாக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த நிலையில், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.