பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திர மண்டபத்தில் சந்தித்தார்.
அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர்,அரசியலுக்கு வர பயம் இல்லை. ஊடகங்கள் பார்த்துதான் பயம். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும்? நான் ஏதாவது பேசினால் உடனே விவாதமாகிவிடுகிறது. ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஊடக நிருபர் உங்கள் கொள்கைகள் என்ன என்று கேட்டார். எனக்கு தலை சுற்றிவிட்டது. நைஸ் நைஸ் என்றேன்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் நிற்கப் போவதில்லை. அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996லேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.என் மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு.தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தன்னால் அமைக்க முடியும் என்றும் பேசினார்.
இதேபோல் நேற்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சென்னையில் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
ரஜினிகாந்த வெளியிட்ட அறிக்கை :
இந்நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ,ரஜினி மக்கள் மன்றத்தில் நியமனம், மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் என் ஒப்புதலுடனே அறிவிக்கப்படுகின்றது. அனுமதியின்றி நடந்ததாக சிலர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
மன்றத்தை வைத்து அரசியலில் சாதிக்க முடியாது.வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது.மன்றத்தை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது .மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது.
தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறோம். மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வதற்கு நாம் ஏன் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும்.அரசியலில் பதவி சுகத்துக்கும், பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் வருபவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன் என்று பரபரப்பாக அறிக்கையில் உள்ளது. பதவி சுகம் காணும் எண்ணத்தில் உள்ளவர்கள் இப்போதே விலகி விடுங்கள் என்றும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…