#BREAKING: பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது -நீதிபதி

மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவதை மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்து இருந்தால் தனக்கு ஐஐஎஸ் பதவி உயர்வு கிடைத்து இருக்கும். இந்நிலையில், ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் ஆய்வுக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரி வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவதை மத்திய அரசு தான் முடிவெடுக்கும். பதவி உயர்வு அடைப்படை உரிமைகளில் ஓன்றுதான், ஆனால் தகுதியானவர்களையே நிர்வாகம் தேர்வு செய்யும் என நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு வழங்குவது நிர்வாக ரீதியிலான முடிவாகும் என தெரிவித்தார். மேலும், மனுதாரரின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025