வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக கொடுப்பதா? – முக ஸ்டாலின்

Default Image

மாணவரணி உள்பட பலவற்றில் பதவி வகித்து தற்போது திமுக தலைவராகி உள்ளேன் என முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று திருவள்ளூர் அருகே கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் முக் ஸ்டாலின், மெட்ரோ ரயில் சேவையை கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் 13 வயதிலேயே இந்திக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதியுடன் பங்கேற்கிறேன். மாணவனாக இருந்தபோது மாணவர்களை ஒன்று திரட்டி இந்திக்கு எதிராக வீதியில் எறங்கி போராடினேன். மாணவரணி உள்பட பலவற்றில் பதவி வகித்து தற்போது திமுக தலைவராகி உள்ளேன் என கூறியுள்ளார்.

கடந்த 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்ன நிலையில் உள்ளது என்பதைக் கூற எடப்பாடி பழனிசாமி தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 2016ல் அதிமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது செய்யாதது ஏன்? என்றும் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக கொடுப்பதா என விமர்ச்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்