“பாட்டாளிகளே தயாராவீர்!தொடங்கி வைக்க நானே வருகிறேன்;புதியதோர் தமிழகம் படைப்போம்” -பாமக நிறுவனர் ராமதாஸ்!

Published by
Edison
பாமக கட்சியின் அமைப்பு ரீதியிலான 20 முதல் 25 கிராமங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு ஒன்றியத்திலும் பாமகவினரின் இரு சக்கர ஊர்தி பேரணியை தொடங்கி வைக்க வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக கட்சியின் அமைப்பு ரீதியிலான 20 முதல் 25 கிராமங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு ஒன்றியத்திலும் இரு சக்கர ஊர்தி பேரணியை  தானே நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளதாகவும்,மாவட்ட செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்,மக்களை சந்தித்து,அவர்களுடன் உரையாடுவோம்!
மக்கள் ஆதரவை வெல்வோம்,புதியதோர் தமிழகம் படைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்.அவர்களின் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களுக்கு கடந்த 4 ஆம் தேதி கடிதம் எழுதி இருந்தேன். ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் தனித்தனியாக அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தேன்.
கடிதத்தை பெற்ற மாவட்ட செயலாளர்களில் சிலர், அந்தக் கடிதத்தில் நான் கேட்டுக் கொண்டிருந்தவாறு கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் பலர் அந்தப் பணியை தொடங்கவில்லை. அவர்களும் அடுத்த ஓரிரு நாட்களில் மக்களை சந்திக்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று நம்புகிறேன்.அனைவரின் செயல்பாடுகளையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பாராட்டுகளும், செயல்படாதவர்களுக்கு கண்டிப்புகளும் உறுதி. யாரையும் கண்டிக்க வேண்டிய தேவை எழக்கூடாது என்பதே என் விருப்பம்.
டிசம்பர் 4ஆம் தேதிக்கு பிறகு பல மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தங்களுக்கு பதவி கிடைப்பதற்கு முன்பே அந்தக் கடிதத்தை படித்திருக்கக்கூடும். படித்தவர்கள் அந்தக் கடிதத்தில் உள்ள அம்சங்களை நினைவூட்டிக் கொள்ளுங்கள். படிக்காதவர்கள் எனது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அக்கடிதத்தை படித்து அதில் உள்ள விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள். அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு புதிய மாவட்ட செயலாளர்களும் மக்கள் சந்திப்பைத் தொடங்குங்கள்.
மக்கள் சந்திப்பைத் தொடர்ந்து அடுத்தகட்ட பணி நமக்கு காத்திருக்கிறது. கட்சி அமைப்பு ரீதியான ஒன்றியங்களில் இரு சக்கர ஊர்தி பேரணி நடத்துவது தான் நமது அடுத்தக்கட்ட பணி ஆகும். நமது கட்சியின் அமைப்பு ரீதியிலான ஒன்றியம் என்பது 20 முதல் 25 கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது ஆயிரம் பேர் இரு சக்கர ஊர்திகளில் கட்சி ரீதியிலான ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று நமது கொள்கைகளையும் சாதனைகளையும் சொல்ல வேண்டும். ஏதேனும் ஒரு கிராமத்தில் அங்குள்ள மக்கள் வழங்கும் உணவை சாப்பிட்டு அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து ஆதரவைத் திரட்டுவது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
ஒன்றிய அளவிலான இரு சக்கர ஊர்தி பேரணியை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் நானே நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளேன். மாவட்ட செயலாளர்களும், ஒன்றிய செயலாளர்களும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.இது தொடர்பான அறிவிப்பை கட்சித் தலைமை விரைவில் வெளியிடும். அதற்காகக் காத்திருங்கள்.
இரு சக்கர ஊர்திப் பயணம் மேற்கொள்வோம்;இளைஞர் சக்தியை ஒன்று திரட்டுவோம்;மக்களை சந்திப்போம்.அவர்களுடன் உரையாடுவோம்.
மக்கள் ஆதரவை வெல்வோம்.புதியதோர் தமிழகம் படைப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

4 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

4 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

5 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

5 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

7 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

8 hours ago