அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ரூ.92,000 கோடி மதிப்பிலான நடைமுறைக்கு வரவில்லை.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், எத்தனை சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சமர்ப்பித்தார்.
420 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. அதில், 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரூ.9740 கோடி மதிப்பிலான 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை.
கைவிடப்பட்ட அறிவிப்புகள் – 26, அதன் மதிப்பீடு ரூ.5,469.78 கோடி, நிதி விடுவிக்கப்படாமல் பணி துவங்கபடாமலும் உள்ள அறிவிப்புகள் – 143, அதன் மதிப்பீடு ரூ.76,618.58 கோடி, பணிகள் நடைபெற்று வரும் அறிவிப்புகள்- 348, அதன் மதிப்பீடு ரூ.1,47,922.88 கோடி, நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகள் – 1167, அதன் மதிப்பீடு ரூ.87,405 கோடி என்றும் செலவினம் ரூ.41,844 கோடி எனவும் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…