புலிகளை பாதுகாக்க “PROJECT TIGER” திட்டம் – நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியீடு!
புலிகளை பாதுகாக்கும் “PROJECT TIGER” திட்டத்தின்கீழ் சத்தியமங்கலம், புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தில் புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியிட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகத்தில் “PROJECT TIGER”(புலிகள் திட்டம்) திட்டத்தின்கீழ் புலிகளை பாதுகாக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியிட்டுள்ளது.
அதன்படி,சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் “புலிகள் திட்டத்திற்கு” நிர்வாக அனுமதியின்படி ரூ.4.86 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
மேலும்,ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதல் தவணை ரூ.2.12 கோடி நிதியை ஒதுக்கி “புலிகள் திட்டத்திற்கு” நிர்வாக ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
“PROJECT TIGER” திட்டம் – நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணைகள் வெளியீடு! pic.twitter.com/JTr0ov7ZbN
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) December 27, 2021